Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைவாசம் அனுபவித்துவந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமருக்கு பிணை

In உலகம்
Updated: 11:27 GMT, Jun 29, 2017 | Published: 11:27 GMT, Jun 29, 2017 |
0 Comments
1201
This post was written by : Risha

ஊழல் வழக்கில் 27 மாத சிறைத் தண்டனையை அனுபவித்துவந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட்டிற்கு இன்று பிணை கிடைத்துள்ளது.

அதன்படி அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை குற்றங்களில் ஈடுபடாத கைதிகளின் தண்டனையை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் இஸ்ரேலின் பொதுவான நடைமுறைக்கு அமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அரச தரப்பு வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்ய தீர்மானித்தால் விடுதலை தாமதிக்கப்படலாம் என முன்னாள் பிரதமரின் சார்பான வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

71 வயதான ஒல்மெர்ட் 2006 முதல் 2009 வரை இஸ்ரேலின் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஒல்மெர்ட் விடுதலையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg