Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹம்பர் சான்ட் கடற்கரை மரணங்கள் விபத்துக்களே : மரண விசாரணை அதிகாரி

In
Updated: 16:41 GMT, Jun 30, 2017 | Published: 16:34 GMT, Jun 30, 2017 |
0 Comments
1849
icon_com
This post was written by : S.K.Guna
Camber Sands

ஹம்பர் சான்ட் கடற்கரையில் கடந்தவருடம் ஐந்து தமிழ்இளைஞர்கள் உட்பட ஏழுபேர் கடலில் மூழ்கி உயிரிழந்தமை விபத்துக்கள் என மரண விசாரணை அதிகாரி முடிவுரை வழங்கியுள்ளார்.

ஹம்பர் சான்ட் கடற்கரையில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் ஏழுபேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தநிலையில் ஹம்பர்சான்ட் கடற்கரையில் உயிர்காப்பு பணியாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தால் கூட இந்த இழப்புகளை தடுத்திருக்க முடிந்திருக்குமா என்பது குறித்து தெளிவாகத் தெரியாதெனவும் மரணவிசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அன்றையதினத்தில் கடற்கரையில் கடுமையான நீரோட்டம் இடம்பெறவில்லையெனவும் இதனால் இந்தமரணங்களுக்கு நீரோட்டம் காரணமாக இருக்கவாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சத்தியநாதன் கெனுகன் ( வயது 18) அவரது சகோதரர் சத்தியநாதன் கோபிகாந்தன் ( வயது 22) ரவி நிதர்சன் ( வயது 22) சிறிஸகந்தராஜா இந்துசன் ( வயது 23) மற்றும் சிறிதவராஜா குருசாந் ( வயது 27) ஆகியோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg