Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்

In இலங்கை
Published: 02:19 GMT, Jul 1, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Anojkiyan
pat

மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கும் வைபவம் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கம்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு பல்லேகலையில் அமைந்துள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் சேவையாளர்களின் சேவை புறக்கணிப்பு காரணமாகவே பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவத்திற்கான அழைப்புக் கடிதங்களை அனுப்புவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, நியமனக் கடிதங்களை பெறவிருப்போரின் பெயர் விபரங்கள் மாகாண கல்வி அமைச்சின் இணையத் தளத்தின் ஊடாக வெளியிடப்படும். கண்டி கெட்டம்பேயில் அமைந்துள்ள மாகாண தமிழ் கல்வி அமைச்சிலும், பல்லேகலை பிரதான அமைச்சிலும் பெயர்ப் பட்டியல் காட்சி படுத்தப்படும்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg