Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மடு பிரதேசத்தை முன்னேற்றுவது எமது கடப்பாடு: றிஸாட் பதியுதீன்

In இலங்கை
Published: 03:40 GMT, Jul 1, 2017 |
0 Comments
1480
icon_com
This post was written by : Risha
rishad

யுத்தம் நிறைவடைந்த போதும் யுத்தத்தின் வடுக்களால் மோசமாக பாதிக்கப்பட்டு இன்னும் தலைதூக்க முடியாதுள்ள மடுப் பிரதேசத்தை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உண்டென்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மடு பிரதேசத்தின் கீரி சுட்டான் கிராமத்தின் தேவைகளை இனங்கண்டு தீர்த்துவைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) கீரி சுட்டான் கிராமத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசம் யுத்தத்தினால் பாரிய தாக்கத்தை எதிர்நோக்கியது என்பதை நாம் அறிவோம். இதனால் மடுவின் கல்விவளர்ச்சி பின்னடைந்தது.

இதனால், கடந்த காலங்களில் வட. மாகாண முன்னாள் ஆளுநரின் உதவியுடன் இந்த பிரதேசத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து கல்வியை ஊக்கப்படுத்தினோம். அதன்படி மடு பிரதேச கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

எனினும், கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதிகள் போன்ற விடயங்களில் இக்கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, முதல் கட்டமாக வீதி அபிவிருத்தி அமைச்சரின் உதவியைப் பெற்று கிராமத்துக்கான பாதைகளை புனரமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளேன். தேவை ஏற்படின் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன்.

வருட முடிவிற்குள் இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முடிந்தளவு பெற்று பாதையை புனரமைப்போம். இந்த கிராமத்தின் வைத்திய வசதி கருதி ஆரம்ப மருத்துவப் பிரிவொன்றை அமைத்துத்தரும் வகையில் 2018ஆம் ஆண்டுக்குள் அந்த திட்டத்தை உள்வாங்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளரையும் கோரவுள்ளேன்.

அதேவேளை, கிராம மக்களின் ஒத்துழைப்புடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பழரச உற்பத்தி தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்கு வகை செய்யப்படும் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg