Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோதனைகளை கண்டு துவண்டு விட வேண்டாம்: டெனீஸ்வரன் ஆலோசனை

In இலங்கை
Updated: 05:22 GMT, Jul 1, 2017 | Published: 04:08 GMT, Jul 1, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Arul Jesu
danis - 01

வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும், வேதனைகளும் மாறி மாறி வருவதனை தவிர்க்க முடியாது என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு சோதனைகள் வரும் போது மன உறுதியோடு செயற்படுதல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் புனித பெற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சோதனைகள் வரும் போது துவண்டுவிடாது மன உறுதியோடு செயற்பட்டு அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் ஒரு விடயத்தை செய்வதற்கு முன்னர் அது சரிதானா என்பதனை ஒரு தடவைக்குக்கு இருதடவை நன்கு சிந்திக்க வேண்டும் என தெரிவித்த அவர், அவ்வாறு சிந்தித்து செயற்பட்டால் நிச்சயமாக சரியான விடயங்களை சரியாக இனங்கண்டு கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

danis - 02 danis - 03

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg