Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து இலங்கையர்களும் சுயமரியாதையுடன் வாழும் நிலை ஏற்பட வேண்டும்: கனடா

In இலங்கை
Published: 07:22 GMT, Jul 1, 2017 |
0 Comments
1522
icon_com
This post was written by : Risha

இன, மத, மொழி பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு அனைத்து இலங்கையர்களும் சமாதானமாகவும், சுயமரியாதையுடனும் வாழக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என நம்புவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் தெரிவித்துள்ளார்.

கனடாவின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக சிறப்பான உறவுகள் நீடித்து வருகிறது.

அதேவேளை, முக்கிய விடயங்களை கையாள்வதில் கனடாவும், இலங்கையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அந்தவகையில், இலங்கையுடன் மிக நீண்டகால நட்புறவை கொண்டுள்ள கனடா, இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளின் போது ஆதரவு கரம் நீட்டி வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg