Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்சிங்டன் – செல்சி கவுன்சில்களுக்கான ஆணையர்களை நியமிக்க வலியுறுத்தல்

In
Updated: 08:23 GMT, Jul 1, 2017 | Published: 08:10 GMT, Jul 1, 2017 |
0 Comments
1379
icon_com
This post was written by : Sylviya
09

பிரித்தானிய உள்ளூர் கவுன்சிலின் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில், கென்சிங்டன் மற்றும் செல்சீ கவுன்சில்களுக்கான ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் கவுன்சில் தலைவர் பிரவுனின் பதவி விலகலை வரவேற்ற சாதிக் கான், வெகு விரைவில் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா மேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரவுன் நேற்று (வெள்ளிக்கிழமை) பதவி விலகியமையைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலர் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக கருதுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி ஏற்பட்ட கிரென்பெல் கட்டட விபத்தில் குறைந்தது 80 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அது தொடர்பான விடயங்களை கையாளும் முறை குறித்து பலர் விமர்சனம் தெரிவித்ததைத் தொடர்ந்தே பிரவுன் பதவி விலகினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg