Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் – கொழும்பு புகையிரத சேவை ஆசனப்பதிவுகள் ஆரம்பித்து வைப்பு

In இலங்கை
Published: 09:04 GMT, Jul 1, 2017 |
0 Comments
1489
icon_com
This post was written by : Ravivarman

மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஆசன முற்பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தலைமன்னார் – கொழும்பு புகையிரதசேவை ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மன்னார் சௌத்பார் புகையிரத தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டே நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) காலை மேற்படி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான ஆசன முற்பதிவுகள் தலைமன்னார் புகையிரத நிலையத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஆசன முற்பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதனால் பயணிகளின் ஆசன முற்பதிவு நடவடிக்கைகள் பெரிதும் இலகுவாக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பிரமதாசன், மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பலிகக்கார, மற்றும் அனுசரனை வழங்கிய மொபிட்டல் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0019 DSC_0013 DSC_0001

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg