Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைதியை சீரழிக்கும் நல்லாட்சியின் முயற்சியை தடுக்க திருமலையில் ஒன்றுகூடல்: மஹிந்த அணி

In இலங்கை
Updated: 10:12 GMT, Jul 1, 2017 | Published: 10:12 GMT, Jul 1, 2017 |
0 Comments
1518
This post was written by : Risha

முன்னாள் ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட அமைதியை சீர்குலைக்கும் நல்லாட்சியின் முயற்சியை தடுத்து நிறுத்தும் வகையில் திருகோணமலையில் ஒன்றுகூடவுள்ளதாக மஹிந்த அணியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை திருகோணமலையில் நடத்தப்படவுள்ள மாபெரும் மக்கள் கூட்டம் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) திருமலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த நல்லாட்சி அரசாங்கமானது ஜனநாயகத்தை முழுமையாக இல்லாதொழித்து உள்ளது.

மஹிந்த ஆட்சிக்காலத்தின்போது அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் தேர்தலை நடத்துமாறு கோரி வீதியில் இறங்க வேண்டியுள்ளது.

எனவேதான், நாட்டில் ஜனநாயகத்தை உறுதிபடுத்தவும், பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களை பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராகவும் போராடவுள்ளோம்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் திருகோணமலை மாவட்டம் தேசிய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே, இந்த போராட்டத்தை அங்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்பு கண்ணிவெடிகளும், இரத்தக் கரைகளும் படிந்த திருகோணமலையை அனைவரும் நிம்மதியாக, அமைதியாக வாழும் இடமாக மஹிந்த மாற்றினார். ஆனால் அந்த அமைதியை சீரழிக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

எனவே, நல்லாட்சி எதிராகவும், மீண்டும் ஜனநாயகத்தையும், தேசிய ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கான முதற்கட்டமாக நாளைமறுதினம் திருகோணமலையில் ஒன்றுகூடவுள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg