Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்திற்கும் என்னையே குறைகூறுகின்றனர்: மஹிந்த

In இலங்கை
Published: 10:20 GMT, Jul 1, 2017 |
0 Comments
1432
icon_com
This post was written by : Ravivarman

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னையே குறைகூறி வருகின்றனர் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னையே இந்த அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் உறவு தற்போது முறிவடையும் நிலையில் காணப்படுவதால், அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அனைத்துக்கும் என் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg