Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 10:30 GMT, Jul 1, 2017 | Published: 10:27 GMT, Jul 1, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Elakkiya
sasikala

சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களை பெற்றுக் கொண்ட  விவகாரத்தில் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக சசிகலா மற்றும் அவரின் அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1996 ஆம் ஆண்டு அமுலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

குறித்த வழக்கு விசாரணைகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றில் இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணொளிக் காட்சி மூலம் தோன்றிய சசிகலா தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg