Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாய்- பூனை விற்பனையை தடை செய்ய வான்கூவரில் வாக்களிப்பு

In கனடா
Updated: 15:38 GMT, Jul 5, 2017 | Published: 10:57 GMT, Jul 5, 2017 |
0 Comments
1255
This post was written by : Risha

நாய், பூனை, முயல் போன்ற செல்ல பிராணிகளை விற்பனை செய்வதனை தடை செய்வதற்கு ஆதரவாக வான்கூவர் நாடாளுமன்றில் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டுள்ளமையை விலங்கு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

விற்பனை நிலையங்களில் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது தொடர்பான சட்டவரைவொன்று கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் விற்பனையை தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
செல்ல பிராணிகளை விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பில் ரிச்மண்ட், நிவ் வெஸ்ட்மினிஸ்டர் ஆகிய நகர்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg