Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாஜுதீனின் தடயங்களை மறைத்த வைத்தியரின் மருத்துவச் சான்றிதழிற்குத் தடைவிதிப்பு!

In இலங்கை
Updated: 11:42 GMT, Jul 1, 2017 | Published: 11:42 GMT, Jul 1, 2017 |
0 Comments
2685
This post was written by : Ravivarman

கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினது மருத்துவச் சான்றிதழ் 6 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் எலும்புகள் காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில் கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதையடுத்தே இலங்கை வைத்திய சபை மேற்படி தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரின் மருத்துவச் சான்றிதழ் 6 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவதாகவும், வைத்தியசபை மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மருத்துவ சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg