Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

In இலங்கை
Updated: 13:26 GMT, Jul 1, 2017 | Published: 13:17 GMT, Jul 1, 2017 |
0 Comments
1409
icon_com
This post was written by : Ravivarman
University-of-Moratuwa

டெங்குநோய்த் தாக்கம் காரணமாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றையதினம் (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “தற்போது தீவிரமடைந்துள்ள டெங்குநோயின் தாக்கத்தினைக் கருத்திற்கொண்டே மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரு வாரங்களுக்கு இவ்வாறு கல்வி நடவடிக்கைகளை நிறுத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளோம்” என பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg