Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த புத்தளம் பிரதேசத்தில் சிரமதானப் பணி!

In இலங்கை
Published: 14:45 GMT, Jul 1, 2017 |
0 Comments
1410
icon_com
This post was written by : Ravivarman

புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுரங்குளி நகரிலேயே இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன.

மதுரங்குளி சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணிகள், பாடசாலை சுற்றுச் சூழல் ,மதுரங்குளி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல இடங்கள் இதன் போது இனங்காணப்பட்டு ஒழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சிரமதானப் பணிகளுக்கு புத்தளம் பிரதேச சபையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (5) - Copy unnamed (4) - Copy unnamed (3) - Copy unnamed (2) - Copy unnamed (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg