Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன ஒற்றுமைக்கு உள்ளத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி

In இலங்கை
Published: 16:04 GMT, Jul 1, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Ravivarman
chandrika-1

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்போது உள்ளம், சிந்தனை, எண்ணம் என்பனவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கச் செயலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிறுவகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நல்லிணக்கச் செயலகம் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கிறது. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அரசியல் தலைமைத்துவம் முக்கியமானதாகும்.

இதில் சிவில் அமைப்புக்களுக்கும் பங்களிப்புக்களை வழங்க முடியும் இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் தேவையாகும்.

இதற்கான செயலணி ஒன்று இயங்குகின்றது நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரே இலக்குடன் பணியாற்றி அனைத்து இனத்தவர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து வருகின்றது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg