Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கிலிருந்து கதிர்காமத்தை நோக்கி இன ஐக்கியத்திற்கான பாதயாத்திரை!

In இலங்கை
Published: 16:26 GMT, Jul 1, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Ravivarman
w

வடக்கிலிருந்து சுமார் 750 கிலோ மீற்றர் தூரத்தைக்கொண்ட கதிர்காமத் திருத்தலத்தை நோக்கிய பாதயாத்திரை இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பு கல்லடி பாலம் வழியாக ஆரையம்பதி ஆலயத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 8ம் திகதி யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரையில் 29 பெண்கள் உட்பட 150பேர் பங்கெடுத்துள்ளனர்.

இம்மாதம் 13ம் திகதி உகந்த காட்டுப் பகுதியூடாகச் செல்லும் பக்தர்கள் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ள கதிர்காம முருகன் ஆலய உற்சவத்தில் பங்கு கொள்வார்கள்.

எம்.வேல்வேந்தன் தலைமையிலான இப்பாதயாத்திரை 52 நாட்களைக் கொண்டதுடன், நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே சமாதனமும் ஐக்கியமும் ஏற்படவேண்டியே இப்பாதயாத்திரையில் பக்தர்கள் ஈடுபடுவதாக பாதயாத்திரை ஏற்பாட்டாளரான வேல்வேந்தன் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg