Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“நீரோகம” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

In இலங்கை
Published: 16:40 GMT, Jul 1, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Ravivarman
unnamed (10)

புத்தளத்தில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நீர்மாணிக்கப்படவுள்ள 34 வீடுகளைக் கொண்ட ‘படைவீரர் நீரோகம’ எனும் வீடமைப்புக் கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.

நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் அழைப்பின் பேரில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டம் அடுத்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதி முடித்து வைக்கப்பட்டு வீடுகள் பயனாளர்களுக்கு கையளிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி, அசோக பிரியந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

unnamed (9) unnamed (8) unnamed (7)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg