Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை!

In இலங்கை
Updated: 05:45 GMT, Jul 2, 2017 | Published: 03:44 GMT, Jul 2, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Vithushagan
maith1.jpg2_.jpg4_

கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாலிகாபிடிய விளையாட்டரங்கில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற 95ஆவது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் நண்பனாக செயற்பட்டுவரும் மக்கள் இயக்கமான கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்துவது நாட்டின் வறுமையை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டு சொத்துக்களை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு கூட்டுறவு இயக்கத்திற்கு சொந்தமான பெரும்பாலான துறைகளை மேம்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களை மேம்படுத்தும் அதேவேளை புதிய கைத்தொழில்களை உருவாக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தில் அதனை பலமான இயக்கமாக மாற்றி புதிய நிகழ்ச்சித்திட்டங்களுடன் முன்கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதுடன், கூட்டுறவு இயக்கத்தின் 2020 தொலைநோக்கை வெற்றிபெறச்செய்வதற்கு இத்துறையில் உள்ள அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg