Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?

In கிாிக்கட்
Updated: 05:13 GMT, Jul 2, 2017 | Published: 04:37 GMT, Jul 2, 2017 |
0 Comments
1290
icon_com
This post was written by : Anojkiyan
jas

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆகவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்துவதில் ஆர்வம் காட்டும்.

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் இன்றைய 4வது மற்றும் எதிர்வரும் ஐந்தாவது போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால் சமீபகாலமாக சிறப்பாக விளையாடிவரும் இந்தியா அதற்கு வழிவிடுமா என்பது சற்று சந்தேகமே.

எவ்வாறாயினும் இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கிய போட்டி என்பதால் சுவாரஷ்யத்துக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg