Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை! 

In இந்தியா
Updated: 06:11 GMT, Jul 2, 2017 | Published: 06:03 GMT, Jul 2, 2017 |
0 Comments
1359
icon_com
This post was written by : Surenth
Kachchatheevu

கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, 10இற்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் சென்ற இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடு திரும்பியுள்ளதாகவும் இதனால் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தாம் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கும் தமிழக மீனவர்கள், இந்திய மத்திய அரசாங்கம் இப்பிரச்சினையை உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg