Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி

In இந்தியா
Published: 06:31 GMT, Jul 2, 2017 |
0 Comments
1334
icon_com
This post was written by : Surenth

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. அம்மா அணி உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரிவரும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) சென்னையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்திய முதல்வர் பழனிசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடியுடன் நல்லுறவை வைத்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜெயலலிதாவின் ஆசியுடன் நான் முதலமைச்சராக பதவியேற்ற பின், பிரதமரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியபோது, பிரதமரும் தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பை நல்குமாறு பிரதமர் கோரியிருந்தார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அ.தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவினை கோர வருகை தந்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பினாலும், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு குணங்களாலும் தான் எதிர்கொண்ட சமூக பொருளாதார தடைகளை தகர்த்தெறிந்துள்ளார். அவர் 2 முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும், பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும் திறம்பட பணியாற்றியிருக்கின்றார்.

எனவே, நாமும் அவரை ஆதரித்து ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பாரத தேசத்தின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்வோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்வோம்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg