Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்டின் முதல் சம்பியன் பட்டத்துக்கு முத்தமிட்டார் ஜோகோவிச்

In டெனிஸ்
Updated: 08:56 GMT, Jul 2, 2017 | Published: 07:17 GMT, Jul 2, 2017 |
0 Comments
1502
This post was written by : Anojkiyan

தொன்மையான விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெற்ற ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மகுடம் சூடியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், பிரான்சின் கேல் மான்பில்சை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேல் மான்பில்சை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார்.

கடந்த காலங்களில் சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஜோகோவிச்சுக்கு இந்த வெற்றி உத்வேகம் அளித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பிறகு ஜோகோவிச் வென்ற முதல் சம்பியன் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg