Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு ஒழிப்புக்கு தயாராகும் மஹிந்த அணி!

In இலங்கை
Published: 08:40 GMT, Jul 2, 2017 |
0 Comments
1479
icon_com
This post was written by : Vithushagan
x5

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்காக  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில்  டெங்கு ஒழிப்பு படையணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல்  நடை பெறாமையினால் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு நோய் பரவும் பகுதிகளில் முறையான சுகாரதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மலேரியாவை ஒழிப்பதற்காக என். எம். பெரேரா போன்றவர்கள் முன்னெடுத்த சூரியமல் செயல் திட்டத்தை போன்ற ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg