Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘கலாம்சாட்’ செயற்கைக்கோளை வடிவமைத்த குழுவினருக்கு ஸ்டாலின் பாராட்டு

In இந்தியா
Published: 08:28 GMT, Jul 2, 2017 |
0 Comments
1546
icon_com
This post was written by : Surenth
M.K Stalin 02

‘கலாம்சாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை என்னை நேரில் சந்தித்தனர்.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் நிறை கொண்ட மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது போன்று செலுத்தியுள்ளமை பாராட்டுக்குரிய ஒன்று.

சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த இந்த செயற்கைகோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூறும் வகையில் ‘கலாம்சாட்’ என்று பெயரிடப்பட்டு இந்த செயற்கை கோளை வடிவமைத்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன். தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இது போன்ற சாதனைகள் இன்னும் தொடர வேண்டும்.” எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

M.K Stalin 01 M.K Stalin 03 M.K Stalin

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg