Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு துச்சமாகக் கருதுகிறது: வைகோ

In இந்தியா
Updated: 08:58 GMT, Jul 2, 2017 | Published: 08:52 GMT, Jul 2, 2017 |
0 Comments
1464
This post was written by : Surenth

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமாகக் கருதியும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்துவிடாமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருவதாகவும் இது குறித்த முழு விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் வழங்கி அனுமதியை பெற  தீவிர முயற்சியில் அந்த அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகளை அமைத்தால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து சிறிதளவு நீர் கூட கிடைக்காது எனவும் ஒருபோகம் கூட செய்ய முடியாமல் காவிரிப் படுகையில் 12 இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் தரிசு நிலமாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அலட்சியப்படுத்தும் வகையிலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும் கர்நாடகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணைபோகிறது என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg