Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழகை பராமரிப்பதற்கு வேம்பு சிறந்த மருந்து

In
Updated: 09:38 GMT, Jul 2, 2017 | Published: 09:38 GMT, Jul 2, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Kemasiya
ld720

வேம்பு சிறந்த மருத்துவப் பொருள் என்பது யாவரும் அறிந்தது. இதன் ஒவ்வொரு பாகமும் மருத்துவ சக்தி கொண்டவை. அழகுக்கலையில் வேம்பின் பயன்கள் இவை.

வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு போத்தலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ஊற்றி குளித்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

தோலிற்கு போடும் ரோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு இந்த வேப்பிலை நீரை பஞ்சில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது துடைத்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதைப்போன்று அந்த நீரை தலைக்கு ஊற்றி  ஊறவிட்டு கழுவினால் தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

வேப்ப இலை மற்றும் ஒரேஞ் தோல் சிறிது எடுத்து அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அரைத்தெடுக்க வேண்டும்.

அரைத்த கலவையுடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள்,தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.

வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து தலைக்கு தேய்த்து கழுவினால் பேன்,பொடுகுத் தொல்லை  நீங்கி விடும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg