Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராமப்புறப் பாடசாலைகளும் தரமுயர்த்தப்படும்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 09:39 GMT, Jul 2, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Ravivarman
1_President_MS

முன்னணிப் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இருந்துவரும் போட்டிக்கு நிலையான தீர்வு கிராமப்புறப் பாடசாலைகளை தரமுயர்த்துவதே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பக்கூடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கல்விக் கண்காட்சியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நகரத்திலுள்ள பாடசாலைகளே சிறந்த பாடசாலைகள் என்ற எண்ணத்தின் காரணமாக பெற்றோர்களிடையே இந்தப் போட்டித்தன்மை ஏற்பட்டிருப்பதுடன்,கிராமங்களில் இருக்கும் பாடசாலைகளைச் சிறந்த பாடசாலைகளாக மாற்றி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது.

இதற்காக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் குறித்த பிரதேச அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg