Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்காப்பு கலை கற்க சீனா செல்லும் பிரபுதேவா!

In சினிமா
Published: 10:09 GMT, Jul 2, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Vithushagan
DDkuFXdVwAAcPIW

‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘யங் மங் சங்’.  இந்த படத்திற்காக தற்காப்பு கலையை கற்பதற்காக நடிகர் பிரபுதேவா சீனா செல்லவுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபு தேவா ஒரு குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். இப்படம் முழுவதும் குங்பூவுக்கு முக்கியத்துவம் உள்ளது. எனவே நடிப்புக்காக சும்மா ஸ்டன்ட் செய்யாமல் பிரபு தேவா முறைப்படி அதனைக் கற்றுக் கொள்ள கூடிய வகையில் விரைவில் சீனா செல்லவிருக்கிறார்.

இதைப் பற்றி பிரபு தேவா கூறுகையில் ‘‘நடனமும் தற்காப்புக் கலையும் ஒன்றே போலத் தான். மார்ஷல் ஆர்ட் ஒன்றினை முறைப்படி கற்பதன் மூலம் தன்னுடைய நடனத்தையும் மேலும் சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்றார்.

யங் மங் சங்’ ஒரு சண்டை  நகைச்சுவை  திரைப்படம். இதில் தங்கர் பச்சான், பிரபு தேவாவுக்குத் அப்பாவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆர்.ஜே.பாலாஜி, தங்கர் பச்சான், ‘பாகுபலி’ பிரபாகர் கலக்கேயா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கும்கி அஸ்வின், சித்ரா லட்மணன், மாரிமுத்து ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அம்ரீஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg