Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரன்சம்வெயார் இணைய வழி தாக்குதல் விவகாரம்: உக்ரைனின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு

In ஐரோப்பா
Updated: 15:37 GMT, Jul 5, 2017 | Published: 10:54 GMT, Jul 5, 2017 |
0 Comments
1301
icon_com
This post was written by : Anojkiyan
rams

உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை நிறுவனங்களை குறி வைத்து நடத்தப்பட்ட ரன்சம்வெயார் என அழைக்கப்படும் இணைய வழி தாக்குதலில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக உக்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

ரன்சம்வெயார் என அழைக்கப்படும் இணையத் தாக்குதலில் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் தொடர்புபட்டிருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை நிறுவனமான எஸ் பி யு, தெரிவித்திருந்தது. ஆனால் உக்ரைனின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட முதல் நாள் ரஷ்யாவின் பாரிய எண்ணெய் நிறுவனங்கள் குறித்த இணைய தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததால், இத்தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யாவில் செயல்படவில்லை என இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறையில் பாதிப்பை ஏ;றபடுத்திய ரன்சம்வெயார் இணையத் தாக்குதலில் கணினிகளை செயலிழக்க வைத்து பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் கொண்டு பிணைத்தொகையை செலுத்துமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg