Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய கீதத்தை ஆர்வத்துடன் கட்டாயமாக பாட வேண்டும்: பிலிப்பைன்ஸில் புதிய சட்டம்

In
Published: 11:27 GMT, Jul 2, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Anojkiyan
phi

தேசிய கீதம் பாடும்போது, உற்சாகத்துடன் பாட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் ஒரு சட்டமூலத்திற்கு பிலிப்பைன்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

‘தேசிய கீதத்தை ஆர்வத்துடன் கட்டாயமாக பாட வேண்டும்’ எனவும் ‘தேசிய கீதத்தை அவமதிக்கும், கேலிக்குரியதாக்கும் எந்தச் செயலும் தண்டைக்குரியது’ என குறித்த சட்டமூலம் கூறுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் ‘கட்டாயம்’ என்ற வார்த்தை இல்லை. தற்போது உள்ள மெட்டுக்கு, அதிகாரப்பூர்வ இசையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறுபவர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாணயபடி 50,000 – 100,000 பேசோக்கள், (அமெரிக்க டொலர் படி 2,800 – 5,590) அபராதம் விதிக்கப்படலாம். தற்போதுள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அபராதத்தை விட (5,000-20,000 பேசோக்கள்), புதிய அபராதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களின் பெயர் நாளிதழ்களில் வெளியிடப்பட்டுவதற்கு முன்பாக, அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுக்கப்படும்.

பாடலின் முதல் வரியான ‘லுபங் ஹினிராங்’ என்பது தொடங்கும்போது, அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மாணவரும் தேசிய கீதத்தின் வார்த்தைகளை மனப்பாடமாக செய்வதை பாடசாலைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பரவலான நிபந்தனைகளை இந்த சட்டமூலம் விதித்துள்ளது

நாடாளுமன்றத்தின் மற்றொரு அவையான, செனட்டின் ஒப்புதலுக்காக சட்டமூலம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg