Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த தேர்தலில் வாக்கிற்காக சேவை செய்பவன் நான் அல்ல : ஜனா

In இலங்கை
Published: 12:02 GMT, Jul 2, 2017 |
0 Comments
1458
icon_com
This post was written by : Ravivarman

அடுத்த தேர்தலில் எனக்கு வாக்குக் கிடைப்பதற்காக சேவை செய்பவன் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் இன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலில் வெற்றி பெற்றால் தனக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் மாவட்டம் முழுவதும் சேவை செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக இருந்தால் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பொன்னாடைகளைப் பெற்றுக் கொள்வதும் நாடாக்களை வெட்டி திறப்பு விழாக்களைச் செய்வது செய்வது மாத்திரம் அவர்களின் தொழில் அல்ல அவர்கள் மக்கள் சேவகனாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் காலத்தில் நிதானமாக சிந்தித்துச் செயற்பட்டு எமது பிரதேசங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த ஆண்டு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி முடிவுறுவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இணைந்த வட.கிழக்குப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கிழக்கு மாகாணம் தனிமையில் இருக்கும் போது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்” என கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_1429 IMG_1396 IMG_1395 IMG_1362 IMG_1354 IMG_1313 IMG_1309 IMG_1269

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg