Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குப்பைகள் தொடர்பான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை: சம்பிக்க

In இலங்கை
Updated: 14:35 GMT, Jul 2, 2017 | Published: 14:14 GMT, Jul 2, 2017 |
0 Comments
1535
This post was written by : Ravivarman

குப்பைகள் அகற்றுவது தொடர்பில் எந்தவொரு பொறுப்பும் தமது அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதேஇன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேல் மாகாணத்தில் குப்பைகளை சேகரித்தல் மற்றும் அவற்றை மீள் சுழற்சி செய்தல் போன்ற நடவடிக்கைப் பொறுப்புக்கள் மாகாண முதலமைச்சரிடம் ஜனாதிபதியால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குப்பைகளை முறையாக சேகரித்தல் மற்றும் அவற்றை மீள் சுழற்சி செய்தல் போன்ற பொறுப்புக்கள் எனது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பொறுப்பான அமைச்சராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளமை தவறானவையாகும்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg