Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா பற்றுச்சீட்டுகளுக்கான 30 வீத வரிச்சட்டம் மீள பெறப்பட வேண்டும்- திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம்

In சினிமா
Published: 06:34 GMT, Jul 3, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Kemasiya
pic

ஜி.எஸ்.டி வரி விதிப்பை தொடர்ந்து,  தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம்  நடைமுறைப்படுத்தியுள்ள  சினிமா பற்றுசீட்டுக்களுக்கான 30வீத கேளிக்கை வரி வசூலிக்கும் புதியசட்டத்தை மீளப்பெறுமாறு கோரி, திரையரங்க உரிமையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக, சினிமா பற்றுசீட்டுக்களுக்கு 28 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினீமா பற்று சீட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் சினிமா பற்றுசீட்டுக்களுக்கு 30வீதம் கேளிக்கை வரி வசூலிக்கும் புதியசட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.  இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த வரிச்சட்டத்தினை மீளப்பெறாத பட்சத்தில் 3ஆம் திகதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என திரையுலகினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர், எனவே குறித்த போராட்டத்திற்காக எமது ஆதரவை தர முடியாது என்று நடிகர் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்திருந்தார்.

மேலும்- திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆயினும் திட்டமிட்டபடி வரி சட்டம் மீளப்பெறாத பட்சத்தில் வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருந்ததன்படி, இன்றய தினம் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதுடன், அனைத்த படங்களும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg