Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீதான அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணக்கம்

In உலகம்
Published: 05:14 GMT, Jul 3, 2017 |
0 Comments
1431
icon_com
This post was written by : Sylviya

தென்கொரியாவுடன் இணைந்து ஒத்துழைத்து வடகொரியா மீதான அழுத்தங்களை அதிகரிப்பது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் யொஷிஹிடே சுகா (Yoshihide Suga) இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷின்சோ அபே ஆகியோர் தொலைபேசி மூலமான உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக சுகா தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த இரு தலைவர்களும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி – 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனும் தொலைபேசி வாயிலான உரையாடலில் ட்ரம்ப் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடன் நெருங்கி தொடர்புகளை பேணி வருகின்றார். ஏனெனில் வடகொரியாவின் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வல்லமை சீனாவுக்கு உண்டு என்பதாலாகும்.

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் வடகொரியாவின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மூலம் பாதிப்படையும் தருவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg