Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் காயம்

In உலகம்
Published: 06:49 GMT, Jul 3, 2017 |
0 Comments
1609
icon_com
This post was written by : Sylviya

பிரான்ஸின் அவின்யோ எனும் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை நேரில் பார்வையுற்ற ஒருவர் கருத்து தெரிவித்த போது, நான்கு பேரைக் கொண்ட கார் ஒன்று பள்ளிவாசலை நோக்கி வந்ததாகவும் பின்னர் அதிலிருந்து இறங்கிய இருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுத்தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலில் காயமடைந்த எட்டு பேரில் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பிரான்ஸ் ஊடகம் ஒன்று, இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல எனவும் தனிப்பட்ட கோபத்தின் காரணமாக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் அச்சத்தால் பிரான்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg