Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீண்ட காலத்திற்கு பின்னர் திரைக்கு முன்னால் வரும் உமா

In சினிமா
Updated: 18:59 GMT, Jul 15, 2017 | Published: 07:38 GMT, Jul 15, 2017 |
0 Comments
1287
This post was written by : Kemasiya
uma_riyaz_19241

நீண்ட காலத்தின் பின்னர் புதிய படம் ஒன்றில் திரைக்கு முன் வருகின்றார் நடிகை உமா. அர்ஜின் நடிக்கும் புதிய படம் ஒன்றில் தான் உமாவிற்கான வாய்பு கிடைத்துள்ளது.

குறித்த படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் ஏன் நீண்ட காலமா நீங்கள் திரைப்படங்கள் நடிக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு  உமா பதில்  தெரிவித்த போது –

எனக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு விருப்பம். ஆனால் நீண்ட காலமாக எனக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. எந்தபடத்திற்கு யார் ஒத்து வருவார்கள் என்பதை இயக்குனர்களே தெரிவு செய்து விடுகின்றனர். அந்த அளவிற்கு எமது சினிமாத்துறை மோசமாகிவிட்டது. வாய்ப்பு தந்தால் தானே எமது திறமையை வெளிப்படுத்த முடியும். வாய்ப்பே கிடைக்காத பொழுது எப்படி நடிக்க முடியும்.

எனது கணவருக்கும் இதே பிரச்சினை தான் மலையாள இயக்குனர்கள் நினைக்கின்றனர் அவர் தமிழில் பிஸியாக இருப்பதாக, தமிழ் இயக்குனர்கள் நினைக்கின்றனர் அவர் மலையாளத்தில் பிஸி என்று, இப்படி தாமே மாறி நினைத்து கொள்கின்றனரே தவிர எம்மிடம் கேட்பதில்லை.

வாய்ப்பில்லாமல் நடிக்கவில்லை என்பதே உண்மை. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு நடிப்பதில் முழு ஈடுபாடுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg