Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுதல் சிறந்தது

In
Published: 09:09 GMT, Jul 3, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Kemasiya
download

சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன.

பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பக்ரீறியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுப்பதோடு பழங்களில் உள்ள பக்ரீறியாக்களின் வளர்ச்சியை தடுக்கவும் உப்பு பயன்படுகின்றது.

முக்கியமாக உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படும். பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீங்கிவிடும்.

அதிக அமிலங்கள் (சிற்றிக் அசிட்) நிறைந்த பழங்களான எலுமிச்சை,ஒரேஞ், திராட்சை, அன்னாசி, போன்றவை வயிற்றில் அதிக அளவில் அசிற்ரை ஏற்படுத்தும்.

இப்பழங்களில் நார்ச்சத்து விட்டமின்கள் அதிகமாக இருப்பதோடு அசிற்றும் உள்ளது. ஆகையினால் இப்பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் உண்ணும் பழங்களின் சுவை அதிகமாகும். குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சை வாசனை தெரியாது. இதனால் தான் பலரும் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg