Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Published: 09:31 GMT, Jul 3, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Ravivarman
22

மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்தியா வழங்கி உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டி தமிழ் வர்த்தக சங்க ஏற்பாட்டில் கண்டி ‘அவன்னல’ மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்விலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியா மலையக பாடசாலைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்குகின்றது.

இந்தியாவின் உதவியுடன் மலையத்தில் 30 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக, தற்போது முதற்கட்டமாக 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய உள்ளதாக, கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன் எமக்கு உறுதியளித்துள்ளார்.

தற்போது இந்தியா மலையக மக்களின் கலை¸ கலாசார¸ கல்வி¸ வீடமைப்பு¸ சுகாதாரம் போன்ற விடயங்களில் கவனஞ்செலுத்தியுள்ளதுடன் அவைதொடர்பான அபிவிருத்திகளுக்கு பல்வேறுபட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றது” என அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

15 14 13 12 7.2 07 04 03 02

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg