Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்!

In விளையாட்டு
Published: 06:24 GMT, Jul 3, 2017 |
0 Comments
1050
icon_com
This post was written by : Vithushagan
Wimbledon2015-Trophies_2048x2048

2017ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கின்றது இத்தொடர் ஜூலை 16ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

டென்னிஸ் அரங்கில் அனைத்து ரசிகர்களாலும் உற்றுநோக்கப்படும் முக்கிய தொடரில் ஒன்றான விம்பிள்டன் ஓபனில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அசத்தக் காத்திருக்கிறனர்.

இத்தொடரில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பெல்ஜியத்தைச் சேர்ந்த கிர்ஸ்டன் பிலிப்கென்ஸ் உடன் இணைந்து போட்டியிட உள்ளார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் கனடாவைச் சேர்ந்த அடில் ஷமாஸ்தின் உடன் இணைந்து களம் காண்கிறார். மற்றொரு இந்திய வீரரான போபண்ணா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோஜர் வாசலினுடன் ஜோடி சேர்ந்து விளையாடவுள்ளார்.

மேலும், புரவ் ராஜா – திவிஜ் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் – ஜாரெட் டொனால்டுசன் (அமெரிக்கா) ஜோடிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg