Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும்: சுமந்திரன்

In இலங்கை
Published: 11:08 GMT, Jul 3, 2017 |
0 Comments
1670
icon_com
This post was written by : Ravivarman

இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்ந்தும் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதுகாப்பு அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கலந்துரையாடிய பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்புப் படைத்தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அதனடிப்படையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் கலந்துரையாடலின் மூலம் யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்புப் படைத்தரப்பினரிடம் இருக்கும் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் எவ்வாறான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம்.

மக்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் மயிலிட்டி துறைமுகமும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரை வீதி மற்றும் பலாலி வீதி, டச் வீதி, இளவாலை வீதி உட்பட வீதிகளை திறப்பதாகவும் இராணுவத்தினர் உறுதியளித்துள்ளார்கள். இருப்பினும் தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் செயற்பாடுகள் துரித கதியில் நடைபெறுமென எதிர்பார்க்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg