Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகம்புர துறைமுகத்திற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க விஜயம்

In இலங்கை
Updated: 14:45 GMT, Jul 3, 2017 | Published: 14:45 GMT, Jul 3, 2017 |
0 Comments
1325
This post was written by : Ravivarman

பல்வேறுபட்ட பிரச்சினைகளிற்கு முகங்கொடுத்துள்ள அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக திட்டம் மற்றும் அங்குள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இத்துறைமுகத்திற்கு நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்டார்.

துறைமுக ஊழியர்களுடனான கலந்துரையாடலின் போது ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளிற்கு உரிய பதிலளித்த அமைச்சர் மாகம்புர துறைமுகத்தை விற்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதெனவும் , துறைமுகத்தின் பாதுகாப்பினை உறுதி செய்து நாடு முகங்கொடுகின்ற கடன் சுமையை குறைத்து தேசிய தேவைக்கு முன்னுரிமை வழங்கும் புதிய முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் துறைமுகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களினதும் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு காணப்படுகின்ற சட்டச் சிக்கல்களை மனிதாபிமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்விஜயத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம , துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் தலைவர் சுகத் ஹதுன்கே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg