Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

135 வருட வரலாறு கொண்ட பாடசாலைக்கு ஒன்றுகூடல் மண்டபம் இல்லை: பிரதி அதிபர்

In இலங்கை
Published: 15:02 GMT, Jul 3, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Ravivarman
N. Rajathurai Vice Principal

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 135 வருட கால வரலாறு கொண்ட பாடசாலைக்கு மாணவர் ஒன்றுகூடல் மண்டபம் இல்லாதிருப்பது ஒரு பெருங்குறையாக இருந்து வருவதாக ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் என்.இராஜதுரை தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“1882ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் நிறைய அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
உயர்தர விஞ்ஞானப் பிரிவைக் கொண்ட 1 ஏபி பாடசாலையாக இருக்கும் கலைமகள் வித்தியாலயத்தில் தற்போது 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

இந்தப் பாடசாலையிலுள்ள கட்டிடங்கள் சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழையவையாக இருப்பதால்,சிதைந்து போன நிலையில் இருக்கும் இந்தப் பாடசாலையின் வகுப்பறை மண்டபம் என்நேரமும் இடிந்து விழலாம் என்ற அச்சம் உள்ளது.

இது ஒரு நகரப் பிரதேச பாடசாலையாக இருந்தும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் அக்கறையுள்ள தரப்பாரின் கண்களில் படாதிருப்பது கவலையளிக்கிறது.

இது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் நேரில் அழைப்பித்துக் காட்டியதற்கிணங்க புதிய ஒன்றுகூடல் மண்டபம் ஒன்று அமைத்துத் தர உறுதியளித்திருக்கின்றமை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என பிரதி அதிபர் என்.இராஜதுரை தெரிவித்தார்.

DSC06870

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg