Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும்: சந்திரகுமார்

In இலங்கை
Updated: 16:57 GMT, Jul 3, 2017 | Published: 16:57 GMT, Jul 3, 2017 |
0 Comments
1297
This post was written by : Ravivarman

தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனர் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் எதற்காக தியாகங்களை செய்தார்களோ எதற்காக இழப்புக்களைச் சந்தித்தார்களோ, அதற்கான நியாயமான தீர்வு கிடைக்க வேணடும். அதற்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்றவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

போராட்டக் காலத்தில் எந்த தியாகத்தையும் செய்யாதவர்கள் இப்போது அதன் வலிகளை அதிகம் சுமந்தவர்கள் போல் பேசி வருகின்றார்கள், அத்தோடு நாடாளுமன்றத்திலும் அடிக்கடி ஊடகங்களில் செய்தி வரும் வகையில் பேசுகின்றார்கள்.

மேலும் இன்று புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக மாற்றத்தை நோக்கி தாங்களாகவே இளைஞர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர்களின் சக்தி என்பது மிகவும் பலமானது.

அவர்கள் ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேரும் போது இலகுவில் அடையப்படுகிறது. எனவே இளைஞர் சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றம் சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றமாகவே காணப்படும். அந்த வகையில் அந்த மாற்றத்திற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்” என மு.சந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_9962

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg