Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் 2017: வெற்றியுடன் ஆரம்பித்த நடால் மற்றும் அண்டி முர்ரே

In விளையாட்டு
Updated: 09:34 GMT, Jul 4, 2017 | Published: 05:06 GMT, Jul 4, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Vithushagan

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்ற வீரர்களான நடால், முர்ரே ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டென்னிஸ் ரசிகர்களின் பெருவிருப்புக்குரிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான “விம்பிள்டன்” போட்டிகள்  நேற்று (திங்கட்கிழமை) இங்கிலாந்தில் ஆரம்பித்துள்ளன.

இத்தொடரில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள சுவிசர்லாந்தின் வாவ்ரிங்காவும், ரஷ்யாவின் மெத்வதேவும் மோதினர். இப்போட்டியின் நடுவே வாவ்ரிங்கா திடீரென கீழே தவறி விழுந்து காயம் அடைந்தார்.

இருப்பினும் அவர் விளையாட்டை தொடர்ந்தார். ஆனால், காயம் காரணமாக அவரால் சரியாக விளையாட முடியவில்லை. இதை பயன்படுத்தி கொண்ட மெத்வதேவ் 6-4, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில், இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் முர்ரே எளிதாக வென்று இரண்டாம் சுற்றிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெனின் ரபேல் நடாலும், ஜான் மில்மேனும் மோதினர். இப்போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இது அவரது 850 ஆவது வெற்றியாகும்.

இவர்களை தவிற பிரான்சின் ஜோ-வில்ப்ரைட் சோங்கா, குரோஷியாவின் மரின் சிலிக், சுவிசர்லாந்தின் பெய்ரி-ஹூஸ் ஹெர்பர்ட் மற்றும் பிரிட்டனின் அல்ஜஸ் பிடேனி ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg