Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் சோதனை நடவடிக்கை தொடர்பில் பகுப்பாய்வு செய்கிறது தென்கொரியா

In உலகம்
Published: 06:06 GMT, Jul 4, 2017 |
0 Comments
1428
icon_com
This post was written by : Sylviya

வடகொரியாவால் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை தொடர்பில் தென்கொரிய இராணுவம் பகுப்பாய்வு செய்து வருவதாக தென்கொரிய ஜனாதிபதி மூன் – ஜே இன் (ஆழழn துயந-in) இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “அமெரிக்கா மற்றும் தென்கொரியா மேற்கொண்ட முதற்கட்ட பகுப்பாய்வின் படி, குறித்த ஏவுகணை இடைப்பட்ட தொலைதூரத்தை நோக்கி பாயக்கூடிய ஏவுகணையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்குமோ என்பது தொடர்பில் தொடர்ந்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், வடகொரியாவின் நடவடிக்கைகளை அடக்கியாள்வது தொடர்பில் அணமையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்ததை நடத்தப்பட்ட நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஐ.நா சபையின் பாதுகாப்புக் குழுத் தீர்மானங்கள் மற்றும் சர்வதேசத்தின் எச்சரிக்கைகளை புறந்தள்ளி இது போன்ற சோதனை நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg