Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டாரிடம் இருந்து சிறந்த பதில் ஒன்று வேண்டும்: சவூதி வெளியுறவு அமைச்சர்

In உலகம்
Published: 06:24 GMT, Jul 4, 2017 |
0 Comments
3824
icon_com
This post was written by : Sylviya

இராஜதந்திர நெருக்கடி தொடர்பில் சிறந்த பதிலொன்றை கட்டாரிடம் இருந்து எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அப்டெல் அல் – ஜூபைர் (Adel al-Jubeir) தெரிவித்துள்ளார்;.

சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பஹ்ரேன் மற்றும் எகிப்தின் நிபந்தனைகள் தொடர்பில் கட்டார் சிறந்த பதிலை தெரிவிக்கும் என நான் நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் கட்டாருக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்க வழங்கிய கால அவகாசம் மேலும் 48 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கட்டாரின் பதில் தொடர்பில் நாளை  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg