Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதிகளுடன் தொடர்பு:சென்னையில் ஒருவர் கைது

In இந்தியா
Updated: 06:46 GMT, Jul 4, 2017 | Published: 06:45 GMT, Jul 4, 2017 |
0 Comments
1257
icon_com
This post was written by : Elakkiya
raqqa-photo-isil-member-loyal-waves-isil_55e8dfea-6080-11e7-8e9a-26934b659213

இணையத்தளம் ஊடாக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கான பணப்பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில பொலிஸ் பிரிவின் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு படைப்பிரிவின் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், கைது செய்யப்பட்டவர் ஹருண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபர் பணப்பரிமாற்ற தொழிலில் ஈடுபட்டவர் என்றும் தெரியவருகின்றது. குறித்த சந்தேகநபரை விசாரணைகளுக்காக ஜெய்பூர் அனுப்பவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட முஹமட் இக்பாலுடன் ஹருண் தொடர்பு கொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு படைப்பிரிவின் பொலிஸ் கண்காணிப்பாளர் விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹருனுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் மேலும் பல தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg