Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயர்நீதிமன்றில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும்: சட்டத்துறை அமைச்சர்

In இந்தியா
Updated: 09:22 GMT, Jul 4, 2017 | Published: 07:57 GMT, Jul 4, 2017 |
0 Comments
1317
icon_com
This post was written by : Elakkiya
marrage

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சட்டமன்ற அமர்வில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனின் கேள்விக்கு பதிலளித்தபோதே சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, நான்கு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் சண்முகம், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குவதற்கு தி.மு.க. ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்றைய அமர்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg