Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை

In இலங்கை
Updated: 09:04 GMT, Jul 4, 2017 | Published: 09:03 GMT, Jul 4, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
gmoa-720x480

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சைட்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நாளைய தினம் இப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்படுமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் இச் சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் வைத்திய அதிகாரிகளின் போராட்டம் காரணமாக, நோயாளர்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனினும், தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், இதுவரை முன்னெடுத்திராத வகையில் வித்தியாசமாக குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டத்திற்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg